Thursday, October 18, 2012

தினகரன்

தினகரனில் வெளியான செய்தி ...

Tuesday, October 9, 2012

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ( 2012 டிசம்பர் 15 )   அன்புடையீர், வணக்கம். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் நமது பல்வேறு பணிகளில் கணினியின் பங்களிப்பு அளப்பரியது என்பதில் ஐயமில்லை. நமது அன்றாடப் பணிமுதல் ஆய்வுத்திட்டப் பணிவரை அனைத்துமே கணினிவழியே மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளையெல்லாம் மேற்கொள்வதற்கு ஒரு மொழி தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதும் வளர்த்துக்கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும். அவ்வாறு தன்னை வளர்த்துக்கொள்ளாத மொழிகள், ஆதிக்கமொழிகளால் அழிவுக்குத் தள்ளப்படும். அம் மொழிகளைப் பேசும் இனங்களும் அவ்வினங்களின் பண்பாடுகளும் சீரழிவுக்கு உட்படும்.   மூண்டெழும் மொழிப்போர்   இந்தியாவில் இந்திமொழிமட்டுமே நடுவண் அரசின் ஆட்சிமொழி. தமிழ் உட்பட பிறமொழிகளுக்கு அத்தகுதி அளிக்கப்படவில்லை. தமிழ்மொழி தமிழ்நாட்டரசின் மாநில ஆட்சிமொழியாக மட்டுமே நீடிக்கிறது. இந்நிலையில் அனைத்து...

Thursday, October 4, 2012

மாநாட்டுத் தேதி

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு, டிசம்பர் மாதம் 16ம் தேதி 2012, ஞாயிற்றுக்கிழமை  சென்னையில் நடைபெறவுள்ளது. இடம் -  கல்வியியல் அரங்கம், லயோலா கல்லூரி, சென்ன...

செயற்குழுக் கூட்டம்

     செயற்குழுக் கூட்டம் ( 2012 அக்டோபர் 2)  கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ஏற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ந. தெய்வ சுந்தரம் மாநாடு ஏற்பாடுபற்றி விளக்கினார். அதையொட்டி பல்வேறு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. திரு. இராம.கி. ஐயா, திரு, நாக. இளங்கோவன், ஊடகவியலாளர் திரு. டி.எஸ்.எஸ். மணி, தென்மொழி மா. பூங்குன்றன், திரு. கண்ணன் ,முனைவர் N. மனோகரன்,SaveTamil  அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் உட்பட 20 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு நிதிதிரட்டல் உட்பட பல்வேறு செய்திகள் பேசப்பட்டன. ...

கருத்துரைக் கூட்டம்

தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்  - மாநாடு ( 2012 டிசம்பர் 15 ) கருத்துரைக் கூட்டம் இன்றைய தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பு உள்ளது. எனவே கணினித்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளைத் தமிழக அரசு விரைவுபடுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2012 டிசம்பர் 15 ஆம் நாளன்று ஒருநாள் மாநாடு  நடைபெற உள்ளது. மாநாட்டின் அடிப்படை நோக்கங்களைப்பற்றிய ஒரு தமிழ் விளக்க நூல் வெளியீட்டுவிழா இன்று  ( செப்டம்பர் 23 ) காலை 1030 மணிக்குக் கன்னிமாரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் திரு. இராம.கி. தலைமை வகித்தார். திரு. மா. பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் மேனாள் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ள கருத்துகளைத் தெளிவுபடுத்தினார். அதையொட்டி மாநாட்டை எவ்வாறு சிறப்புற...

தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்

தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ் ( பேரா. ந. தெய்வ சுந்தரம்) தமிழ்மொழியின் சிறப்புப்பற்றி அனைவரும் அறிவோம். உலகின் தொன்மையான மொழிகளின் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு. தொன்மையான மொழிகள் சில தங்களதுவரலாற்று வளர்ச்சியில்தொடர்ச்சியின்றி வழக்கிழந்துள்ளன. ஆனால் தமிழ்மொழியோ மக்கள் மொழியாகத் தொடர்ந்து வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறது. இலக்கியச் செழுமையிலும் இலக்கண வளத்திலும் முன்னணியில் நிற்பது தமிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழின் இலக்கியங்களும் இலக்கணங்களும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இன்றைய மொழி ஆய்வாளர்கள்வியக்கத்தக்கவகையில்பழந்தமிழ் இலக்கண நூல்களும் உரையாசிரியர்களின்  உரைகளும் அமைந்துள்ளன.தொல்காப்பியத்தின் அமைப்பும் இலக்கணக் கோட்பாடுகளும்அதனடிப்படையில்அமைந்துள்ள  தமிழ் அமைப்பு விளக்கங்களும்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India