http://maniblogcom.blogspot.in/2012/12/blog-post_19.html
வெற்றிபெற்றது
கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
ஞாயிறு காலை தொடங்கிய கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
தொடங்கிய நிலையிலேயே, அரசுச் செயலாளர்
உட்பட, பல அரசுதரப்பு
அதிகாரிகள் மேடையில் காட்சி அளித்தும், முதல் வரிசையில் அமர்ந்திருந்ததையும் காண முடிந்தது.
அதுவே மாநாட்டின் வெற்றியைப் பறை சாற்றுவதாக அமைந்தது. அதையும் தாண்டி, தமிழ்
அறிஞர்கள் பலர் குறிப்பாக "பல்கலைக்கழக தமிழ் ஆய்வாளர்களும், மாணவர்களும்"
கலந்துகொண்டது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. .மொழியியல் அறிஞரும், முன்னாள் சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் தலைவருமான ந.தெய்வசுந்தரம் தலைமையில் மாநாடு
தொடங்கியது.கண்ணன் "மதிநிறைந்த நன்னாளில்" என்று தொடங்கினார். அன்று
மார்கழி முதல் நாள். மார்கழி மாதம் எப்படி ஓசோன் என்ற 'பிராணவாயு மண்டலத்தை"வலுப்படுத்தும்
தன்மையைக் கொண்டதோ, அந்த மண்டலம்
வலுப்பெறும்...
Wednesday, December 19, 2012
முனைவர் இராம.கி அவர்களின் உரை
கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்
முனைவர் இராம.கி.
சென்னை 600101
மொழி என்பது
அடிப்படையிற் பேச்சையே குறிக்கும். எல்லா மாந்த மொழிகளும் பேசும் வலுவை (speaking ability) இயல்பாகப் பெற்றிருக்கின்றன. அவ்வலு இல்லாது போயின், மொழிகள் வெறும் ஓசைக் கூட்டங்களாய், பிதற்றல்களாய், விலங்கொலிப் பரட்டல்களாய் நின்று போயிருக்கும்.
மொல்>(மொள்)>மொழி.
மொல்மொல்லெனல் = பேசற் குறிப்பு;
மொலுமொலுத்தல் = விடாது பேசல், இரைதல், முணுமுணுத்தல்.
மொல்லுதல் = தாடையசைத்தல்; ஒலி எழுப்பல்.
சாப்பிடுகையில் ஓசையெழுவதையும் மொல்லுதலென்றே சொல்கிறோம். ”அவன் என்ன வாய்க்குள் மொல்லுகிறான்? வாயைத்திறந்து சொல்லவேண்டியதுதானே? இந்த மொல்லல்தானே...